அறிமுக போட்டியில் அரைசதம்- சாதனையில் டிராவிட், கங்குலி உடன் இணைந்தார் விஹாரி - Latest Newzz

It is the Platform To Get Latest News With Good Manner

Latest Newzz

Sunday, September 9, 2018

அறிமுக போட்டியில் அரைசதம்- சாதனையில் டிராவிட், கங்குலி உடன் இணைந்தார் விஹாரி




இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து 332 ரன்களில் ஆல்அவுட் ஆனதும், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அறிமுக வீரரான ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ள ராகுல் டிராவிட், கங்குலியுடன் இணைந்துள்ளார்.




இதற்கு முன் 1946-ல் ருசி மோடி ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடித்துள்ளார். 1996-ல் கங்கு 131 ரன்களும், ராகுல் டிராவிட் 95 ரன்களும் அடித்துள்ளனர். தற்போது நான்காவது வீரராக ஹனுமான் விஹாரி 56 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த 6-வது வீரர் ஹனுமான் விஹாரி ஆவார்.

No comments:

Post a Comment

Popular Posts