7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் உடனடியாக ஆணையை பிறப்பிக்க வேண்டும் - ஸ்டாலின் - Latest Newzz

It is the Platform To Get Latest News With Good Manner

Latest Newzz

Sunday, September 9, 2018

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் உடனடியாக ஆணையை பிறப்பிக்க வேண்டும் - ஸ்டாலின்



முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ், 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,

திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!

எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts